எனக்குள் பேசுகிறேன்01

அன்பெனும் திரை
அறுந்து விழுந்தது
ஆண்டவன் அங்கே
அருவமாய் இருந்தார்!
**** *****
அனிச்சைச் செயல்களின்
உறைவிடம் ஆன்மா!
இச்சையை வைத்துமே
இதையுமே காணவோ?
**** *****
ஒவ்வொரு முறையும்
சாட்டையைச் சொடுக்குவாய்
உள்ளிருந்து இதயம்
துடிப்பதும் உன்னால்!
நீதான் எனக்குள்
'பேஸ் மேக்கரோ'?(Pacemaker)
துடிப்பினை அறிகிறேன்
சொடுக்குதல் உணர்கிலேன்!
**** *****
இதயம் இயங்கும்
உறுப்புகள் இயங்கும்
உறுப்புகள் இயங்க
இதயம் இயங்குமோ?
இறைவனை வைத்தே மதங்கள்
மதங்களை வைத்தோ இறைவன்?
**** *****
படிப்பை வைத்து ஞானம் இல்லை
ஞானத்திலிருந்தே
படிப்பு வளருது!
**** *****

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (16-Jul-15, 5:59 pm)
பார்வை : 343

சிறந்த கவிதைகள்

மேலே