என்னை துடிக்கவிட்டு ஏனடி ரசிக்கிறாய் 555

அன்பே...
சூரியன் எழுமுன்னே
உன் பூமுகம் காண...
என் கண்கள்
தவமிருக்கிறது...
உன் முகம் காணும்
அந்த வினாடியில்...
நீ முகம் திருப்பி மரண வேதனை
கொடுக்கும் போதெல்லாம்...
விட்டுவிடலாம் என்றால்
முடியவில்லையடி...
நீ தூரம் சென்று
என்னை திரும்பி பார்க்கும்...
அந்த ஒற்றை
பார்வையால்...
தொலை தூர பார்வையை என்னருகில்
கொடுக்கலாமே ஒருமுறையேனும்...
ஏனடி என்னை துடிக்கவிட்டு
ரசிக்கிறாய் நீ.....