தொலைபேசியில் தொலைந்த வாழ்கை

அ,ஆ,இ,ஈ தெரியாத குழந்தைகளுக்கு android,apple என்றால் தெரியும்...
ஆளும் அரசை பற்றி கவலைஇல்லை
ஆண்டவனே நேரில் வந்தாலும் கவலைஇல்லை
android இல் அடுத்த அப்டேட் இல்லை என்றால்
உறைந்து விடுகிறது அவன் வாழ்கை!
பறவைகள் போல் வாழ வேண்டும் என்றால்
angry birds போதும் என்கிறான்!
நெட் இருக்கு family எதற்கு ?
whats app இருக்க வாழ்கை எதற்கு?
முகபுத்தகம் இருக்கு ,புது முகங்கள் எதற்கு ?
செல்பி எடுக்கவே நேரம் போதவில்லை,சுற்றியுள்ள உலகத்தை பார்க்க நேரம் எதற்கு ?
3g,4g இருக்க
காந்தி ஜி,நேரு ஜி எதற்கு?
"குனிந்த நடையும்,phone மேல் கொண்ட பார்வையும்
முழு மாதத்திற்கு net pack உம் இருப்பாதால்,செல் போன் மாதர் திரும்புவதில்லையாம்!"
ஓ பாரதி!நீ இருந்துந்திருந்தால் தெரியும்...
"காக்கை சிறகில் நந்தலாலா" என்பது
"ஸ்மார்ட் போன் ஸ்க்ரீனில் நந்தலாலா" ஆனது!

எழுதியவர் : மோனிகா இரவி (16-Jul-15, 7:46 pm)
சேர்த்தது : Monica Ravi
பார்வை : 325

மேலே