மென்பொருளாய்
சொப்பனங்களில் கரைகின்றேன்!
கண்களில் புதைத்து மயங்குகின்றேன்!
விழி திறந்திட விருப்பமில்லை
விழி சிறையில் இருந்து
விடுவிக்க விருப்பமில்லை!
காணும் அனைத்தும்
கண்மணி நீயாக தோன்றுவதால்
நிஜங்களில் தொலைந்து போகின்றேன்!
நிகழ் காலத்தில் நடப்புகளில்
நிலை கொள்ளாத மனது
கற்பனை கனவுகளில் உன்
மடி தேடுகிறது!
எதிர்கால அசைவுகளை
என் விழி அரங்கில்
படம் போடுகிறது!
என்னை ஆட்டுவிக்கும்
மென்பொருளாய் உன்னை
வடிவமைத்தனரோ உன்
பெற்றோர்....?
விழித்திரையில் உலாவரும் உன்னை
தடை செய்ய என்னிதயம்
கடும் பாறையல்ல!
இமை மூடி தவமிருக்கின்றேன்
இதயராணி எனைவிட்டு நீங்காதே!