கடையில்

கடையின் அன்று தான் புதிதாக வேலைக்குச் சேர்ந்த பையனிடம் முதலாளி "இந்தக் கடையைப் பொறுத்த வரையில் வருகின்ற வாடிக்கையாளர்கள் என்ன சொல்கின்றார்களோ அதுதான் சரி. அவர்களை மறுத்து ஏதும் சொல்லக் கூடாது. இதை மறந்து விடாதே" என்றார்.
சிறிது நேரம் சென்றது. கடைக்கு வருகின்ற எல்லோரும் ஏதும் வாங்காமல் செல்வதைப் பார்த்தார் முதலாளி.
பையனைப் பார்த்து, "என்ன நடந்தது?" என்று கேட்டார்.
"வந்தவர்கள் எல்லோரும் இந்தக் கடையில் விலை ரொம்ப அதிகம் என்றார்கள். நானும் நீங்க சொன்னபடியே அவர்களிடம், நீங்கள் சொல்வது உண்மை தான் என்றேன்" என்றான் அந்த அப்பாவிப் பையன்.

எழுதியவர் : சேர்த்தவர் (18-Jul-15, 11:29 am)
Tanglish : kadaiyil
பார்வை : 347

சிறந்த நகைச்சுவைகள்

மேலே