தந்தையின் சவக்கிடங்கு
பச்சிளம் மழலை மலராய் என்னை மார்பில் சுமந்த கருவறை நீ...
என்னைக் கலங்க வைத்த மரணமும் கரைந்தது என் கன்னத்தில் உன் இதழ்கள் பொழிந்த முத்தமழையில்....
அகவைகள் பல தாண்டிய என் நெஞ்சம் அழைக்கிறது உன்னை உள்ளங்கைகளில் ஏந்த...
தவம் கிடக்கிறேன்,உதிரம் உறைய என் விழிநீர் உன்னை எழுப்பாதா என்ற ஏக்கத்தில்...
- உன் சவக்கிடங்கில் நான்.....