திரைகடலோடி துயரம் தேடு

அன்று அவர்கள் இங்கு வந்து அடிமைபடுதினர் ....
இன்று நாம் அங்கு சென்று அடிமைபடுகிறோம்..............?
கேட்டல் மகன் வெளிநாட்டில் வேலை செய்கிறான் என்று மார்தட்டி கொள்கிறோம்!!!!!

குழந்தையின் ஸ்பரிசம் உணர
மனம் ஏங்கும்.......

மொழி
புரியும் வரையில்
நாங்கள்
அந்நிய தேசத்தின்
ஊமைகள் ......

மனம் விட்டு சிரித்து
வெகுநாள் ஆகிருக்கும்???

ஆயிரம் பேரின் மத்தியில்
தனிமையின் சாயல் தோன்றும்!!

ஒரு வருட வாழ்க்கையை
ஒரு மாதத்தில் வாழவேண்டிய நிர்பந்தம்.....

ஆயிரம் வசதி இருந்தாலும்
அம்மாவின் மடியை தேடும் மனம்...

இதயமானது கண்ணாடி சுவர்களுக்குள்
அடைந்திருக்கும்!!
தொலைபேசி அழைப்பானது சொர்கத்தின்
வாசலாக தோன்றும்!!

இதை அனுபவித்தவர்கள் லைக் செய்யலாம்

எழுதியவர் : சந்திர சேகர் ஸ்ரீனிவாசன் (18-Jul-15, 1:58 pm)
பார்வை : 52

மேலே