பெண்ணின் இயந்திர வாழ்க்கை
காலை ஐந்தும ணியாயிற்று,
மலரோ விழித்தெ ழுந்துவிட்டாள்,
சமையல் ஆரம்பித் துவிட்டதுவே,
பிள்ளைகளை பள்ளிக்(கு) அனுப்பியாச்சு! 1
காலையில் சாப்பிட்டு சிறிதோய்வு,
மதியம் சமைக்க வும்வேண்டும்,
மாமனார், மாமியார் உட்படத்தான்
எல்லோரும் சாப்பிட வேண்டுமன்றோ! 2
பிள்ளைகள் களைப்பைப் போக்கயென்றும்
மாலையில் சிற்றுண் டியும்வேண்டும்;
ஒவ்வொரு வர்க்கும் ஒவ்வொன்றும்
பிடித்தமான சுவையில் வேண்டுமென்பர்! 3
இரவும் சமைக்கத் தான்வேண்டும்
எல்லோரும் சாப்பிட; உறங்கிப்பின்
மறுநாள், காலை ஐந்துமணி,
மலரும் விழித்தெழுந் துவிட்டாளே! 4
இயந்திர வாழ்க்கை என்பதிது;
பலப்பல பெண்களுக்கு இதுவேதான்,
பலமும், பலவீ னமிதுவேதான்,
கடமை, கண்ணியம்,கட் டுப்பாடு! 5