என் விதி
விழியோரம் ஆயிரம் மின்னல்களை சுமந்தால்
நல்ல மதிப்பெண் எடுத்தும்
ஒரு டாக்டர்
ஒரு இஞ்சிநியர்
ஆக ஆசை படவில்லை
நான் பெரிய ஆசிரியை ஆவேன் என்று தான்
சின்ன சின்ன ஆசைகள்
ஆனால் அந்த
கொடுமைக்கார கிராமமோ
கொடுமைக்கார சமூகமோ
கொடுமைக்கார சித்தியோ
படிக்க விடவில்லை
சரி...
மாப்பிள்ளை பார்த்தார்கள்
ஒரு டாக்டர்
ஒரு இஞ்சிநியர்
ஒரு ஆசிரியர் எதிர்பார்கவில்லை
ஒரு பனிரெண்டு படித்தால் போதும் என்றால்
ஒரு வேளை செல்லும் மாப்பிள்ளை வேண்டும் என்றாள்
அனால்
அழகு தேவதை அவளுக்கு
வீட்டில் பார்த்தோ
எட்டாவது பெயில் மாப்பிள்ளை !
கடவுளுக்கு
கண் இல்லையா !
காது கேட்காதா !!
சரி
இப்போ என் பிள்ளைகளும் அவரை மாதிரி மக்கு ஆகி விட்ததே !
நான் கிராமதில் பிறந்தது பாவமா
இல்லை பெண்ணாய் பிறந்தது பாவமா
இல்லை நல்ல குடும்பத்தில் பிறந்தது பாவமா!!