பாதி பாதி
புரிந்தது பாதி புரியாதது பாதி
அறிவில்
வெந்தது பாதி வேகாதது பாதி
பசியில்
வளர்ந்தது பாதி வளராதது பாதி
செடியில்
வரைந்தது பாதி வரையாதது பாதி
ஓவியத்தில்
முளைத்தது பாதி முளைக்காதது பாதி
பயிரில்
பிறந்தது பாதி பிறக்காதது பாதி
உண்மையில்
எல்லாமே அரையும் குறையும்
அனுபவத்தில்
விட்டதும் தொட்டதும் படைப்பில்
முழுமை அடைந்தது எது /
படைப்பில் எல்லாமும் அவசரம்
மனிதனும் கூட
வாழ்விலும் தாழ்விலும் பாதி பாதி
மனங்களும் பாதி குரங்கு தான்
எண்ணங்கள் உயர்வாக இருந்தாலும்
உள்ளங்கள் குறுகியதே
படைத்தவன் எண்ணம் மேலானது
மனிதன் மனமோ திருப்தி அற்றது
அதனால் தான் எல்லாம் அரையும் குறையும்
போலியும் நடிப்பும் உருட்டும் புரட்டும்
மனிதன் முழுமை காண்பது எப்போது
போதும் என்ற மனம் காணும் போது