இதை படித்து விடாதே வாழ்கையை சரியாய் வாழ நினைக்கலாம்
மனதில் பட்டதை பேசாதே
கெட்டவன் என்று பெயர் எடுப்பாய்
முன் ஒன்று பின் இரண்டு என பேசு
நல்லவன் நீ என கொண்டாட படுவாய்
சூழ்நிலை பொறுத்து உன்னை மாற்றிகொள்
தவறில்லை,
உலகை ஆள்வதே சூழ்நிலை வாதம் தான்
மறவாதே...!!!
உனக்கு விருப்பம் இல்லை எனினும்
தலை அசைத்து வை
இங்கு பலருக்கு ஆண்டவன் சிரம் கொடுத்ததே
பிறர் விருப்பப்படி அசைப்பதற்கு தான்
உனக்குள் ஒரு திறமை உண்டு
அதை வெளி கொண்டு வர முயற்சிக்காதே
பிறர் விருப்பப்படி வாழ்க்கையை வாழ்
உன் ஆசைகள் நிறைந்த கனவாவது
உன் மனதோடு நிம்மதியாய் உறங்கட்டும்
இந்த உலகின் கண்களுக்கு தெரியாமல்
உன்னை விரும்பும் மனிதரை கண்டு கொள்ளாதே
உன்னை வெறுத்து ஒதுக்கும் மனிதர் பின்பு
நாய் போல் அலைந்து கிட
கல்யாண பேச்சு வரும்
லச்சியம் உண்டென்று சொல்லி காலம் தாழ்த்தாதே
நம் வாழ்க்கையில் முக்கியமே தலைமுறையின் வளர்ச்சி எனும்
பெரியவர்கள் சொல்லை அவமதிக்காதே
வாழும் நாள் அனைத்தும்
சுற்றியுள்ளவரின் மனம் போல் வாழ்ந்து
வயதான காலத்தில் அடுத்தவர் துணை மறுத்து
சரியான வயதில் செத்து விடு
இவை அனைத்தும் செய்
மண்ணில் உள்ளவரை மட்டும் வாழ நினைத்தால்
இறந்த பின்னும் அடுத்தவர் மனதில்
உன் பெயர் வாழ அல்ல....!!!