காதல் என்பது

எண்ணி இருக்கிறேன்
உன் எண்ணத்தோடு பிண்ணி இருக்கிறேன்
உன்னோடு வாழ நினைக்கிறேன்
உனக்காகவே சாக துணிகிறேன்

பார்வைகள் அழகு
நீ பார்த்ததால் நான் அழகு
தனிமைகள் அழகு
தனிமையில் பிறந்த உன் நினைவுகள் அழகு

காற்றோடு மோத வந்தாய்
முகில்களை கொண்டு மூட வந்தாய்
இரவுகளில் நிலவாக பிறக்க வந்தாய்
இனிமைகளை இனித்திட நீ வந்தாய்

செவிகளாக இருந்தாலும்
உன் குரல் மட்டும் கேட்கிறது
பார்வைகளாக இருந்தாலும்
அதில் உன் பிம்பம் மட்டும் பிறக்கிறது

தேடாமல் என்னை தேட வைத்தாய்
தேடி தேடியே உனையே காண வைத்தாய்

காதல் என்பது
காற்றாகலாம்
அது எங்கும் பரவியிருக்கும்

காதல் என்பது
மொழியாகலாம்
அது எவராலும் வாசிக்க பட்டுயிருக்கும்

நம் காதல் என்பது
நமக்காக செய்யப்பட்ட ஒரு கண்ணாடி
அதில் நாம் பார்கின்ற பொழுதுதான் அழகாக தோன்றும்
மற்றவர்களின் பார்வைக்கு பிழையாக தோன்ற கூடும் ..

எழுதியவர் : காந்தி (21-Jul-15, 11:01 am)
Tanglish : kaadhal enbathu
பார்வை : 106

மேலே