புதிய வசந்தம்

ஏதோ சொல்ல வருகிறது காற்று
சொல்லாமலே திரும்பி செல்கிறது
ஜென்னல் திரையில் பட்டு

பசி வந்தால் அழுகிறது
பசி போனால் சிரிக்கிறது
இதுதான் குழந்தை

செவிகள் தேடி செல்கிறது
தூரத்தில் ஒலிக்கும் பாடலை நோக்கி
நமக்கு பிடித்திருக்கும் போது

அருகம் புல்லானாலும் சரி
அதன் மேல் விழுந்த பனிதுளியானாலும் சரி
அழகாகிறது நாம் ரசிக்கின்ற நேரத்தில்

சின்ன சந்தோஷங்கள்
தோன்றி மறைகிறது
நமக்கு பிடித்த ஒன்றை
மற்றவர் இடத்தில் பார்க்கும் போது

துரத்தில் இருக்கின்ற போதுதான் அழகாகிறது
அது நிலவு என்றாலும்
அது நினைவு என்றாலும்

மன்னிப்பு என்ற சொல்லில்
மறைந்திர்கிறது அத்தனை மந்திரம்
அதை மறந்தவர்கள் தான் ஏராளம்

கண்ணுக்கு உண்மையான அழகு
தீட்டும் கண்மை அல்ல
நாம் பார்க்கப்படும் விசியங்களும்
அதில் சேமிக்கப்படும் விசியங்களும் தான்
தீர்மானிக்கும்...

எழுதியவர் : காந்தி (23-Jul-15, 2:22 pm)
Tanglish : puthiya vasantham
பார்வை : 131

மேலே