தோழிக்கு பிறந்தநாள்
~பிறந்தநாள் இன்று.!
கண்மை கொடுத்து
கவி எழுத தூண்டிய
கண்மணிக்கு...
~பிறந்தநாள் இன்று.!
என் எழுத்துக்களை
செதுக்கி சிற்பமாக்கிய
பெண்சிற்பிக்கு...
~பிறந்தநாள் இன்று.!
என் கசப்பான
அனுபவங்களில்
இனிப்பான ஆறுதலை
கலந்து இனிமையாக்கிய
சர்க்கரைப்பெண்ணுக்கு...
~பிறந்தநாள் இன்று.!
என் கேலிகளுக்கு
ஆளாகி அடிக்கடி
சிணுங்கும் அந்த
வட்டமுகத்திற்கு...
$$$$$$##$$//////$$$$$$$//////$$$$$
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!!
நம் எழுத்து தளத்தின் தோழி குந்தவிக்கு பிறந்தநாள் இன்று