அரளிப் பூ அரும்புகள்

அரளிப் பூ அரும்புகளோ !
என் தங்கையை
அன்பால் அர்ச்சிக்கும் இவர்கள் !

அல்லி இதழ் புல்லி இதழ் அல்ல
அன்பிதழ் சொரியும் வார்த்தை
மணங் கமழும் !

உதிரிகளாய் ஊர் சுற்றினாலும்
அழகிய மாலைதான் இவர்கள்
என் குட்டிமாவிடம் !

எத்தனை முறை விழுந்தாலும்
மண்ணை நனைத்து ஆனந்தம் கொள்ளும்
மழைத் துளிகள் இவர்கள் !

வெவ்வேறு இடங்களில் பிறந்தாலும்
ஒற்றைச் சமுத்திரத்தில் இணையும்
ஜீவ நதிகள் இவர்கள் !

இன்பம் வற்றும் வேளைகளில்
எங்கள் இளவரசிக்கு அமுதூட்டும்
அன்பு ஊற்றுகள் இவர்கள் !

இடைவிடாத நடையின் நடுவே
இளைப்பாறும் மரங்களாய் !
இறைவன் தந்த வரங்கள் இவர்கள் !

யார் இவர்கள் !!!

வின் ஆண்டது போதுமென்று
மண் ஆழ வந்தவள் ஒருத்தி !

இன்னொருத்தியோ அன்னை,
இயேசுவிற்கு அல்ல
என் தங்கையின் நலன் காப்பதில் !

இருவரும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள்
வெடித்தால் அன்புச் சிறைதான் !
பூட்டுக்குதான் பஞ்சமில்லையே இவர்கள் ஊரில் !

அதிகம் நாணுவாளோ !
வெட்கம் கொண்டு சிவக்கும் இவள்,
மீண்டும் ஜனித்து திருச்சி வந்த
இன்னொரு வேலுநாச்சியார் !

தயிர் கடையும் மத்தாய்
உயிர் கடைந்து உணவூட்டுவாள் அன்பால் - இவள்
பசும் பால் சொரியும் நெய் மணக்கும் ஊர் உறைந்தாள்!

இவள் ஊரின் இயல்பைப் போலவே
இவளும் திங்களின் குளிர்போல
திவ்யமானவள் !

இமயம் மறந்து இங்கு
எப்பொழுது வந்தாளோ இவள்
உறைவிடமோ உறையூர் ஆனது !

இன்னும் சொல்ல ஆசைதான்
என் செல்லத்தை காக்கும் தேவதைகள் பற்றி !

இருந்தும் இத்துடன் முடிக்கிறேன்
கஷ்டப்பட்டு கண் பட்டுவிடுமோ
என அச்சப்பட்டு !!!

எழுதியவர் : முகில் (23-Jul-15, 8:40 pm)
பார்வை : 215

மேலே