அவன் விதியை முறி

ஒவ்வொரு முறை அழும்போதும்
நினைக்கிறன்
இதுவே இறுதி என்று!
மனதுக்குள் சிரிக்கிறான்
மகேசன்!
காதலில் வெற்றி
என்று சத்தமிட்டு குதித்தால்
குலுங்கி குலுங்கி சிரிக்கிறான்!
அந்த பாக்கியமே கிடையாதாம்!
அவனுக்கென்ன ..
நீ சொல்லடி !
நான் சிரிக்கவா
அவன் எழுத்தை மாற்றி!
உனக்கும் அவனுக்குமே போட்டி!
நான் தானா பகடை காய் !
என்ன இறுமாப்பு
ஆண்டவனாம் அவன்!
இருக்கட்டுமே
நீ சிரி..
அவன் விதியை முறி!
நீ எரி
அவன் என்
தலையில் எழுதியதை எரி!