குடைக்குள் கொதிக்கும் காமம்

..."" குடைக்குள் கொதிக்கும் காமம் ""...
காதலின் பெயர்களால்
காமத்தில் மிதந்திடும்
பறவைகள் இவர்கள்
காட்சி பொருளாகிய
கலாச்சார சீரழிவின்
நவீன சின்னங்கள் !!!
உடைந்த மண்பாண்டமாய்
உள்ளமது சிதைந்துவிட்ட
உயிருள்ள பிணங்களாய்
மலத்தின் நாற்றங்களாய்
தெருவில் முளைத்திருக்கும்
உடையுள்ள நிர்வாணர்கள் !!!
குடைக்குள் தம் முகம்
மறைத்து குடும்பத்தின்
குணங்களை கடைவிரிக்கும்
நாகரீக நாற்றத்து சந்தையின்
சாலையோர சோலையின்
சாக்கடை குட்டைகள் !!!
இவர்கள் எல்லோரும்
நாட்டின் இலக்கணப்பிழை
தத்தம் தலைக்கனத்தின்
மிகுதியினால் இலக்குதனை
மறந்தே இளைப்பாருகின்ற
இச்சையின் பருந்துகள் !!!
என்றும் உங்கள் அன்புடன் ,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...