அன்புள்ள தொலைபேசித் தோழிக்கு

★ யார் நீ.?
எனக்குள் எந்த செல் ஒன்றில் வசிக்கிறாய்.?
★ இதயத்தை உடைக்க..
உன் வார்த்தைகள் போதும்..இடி வேண்டாம்.!
★ என்னோடு நீ எந்த உறவைச்சேர்ந்தவள்.?
தோழியா.?
பிறகேன் வேலி இடுகிறாய் என்...
வேதனை மீது.?
★ பூவைவிட மென்மையானதென் இதயம்..
புயலை விட வன்மையானதுன் மௌனம் ..!
★தொலைபேசிக்குள் நமக்கிடையே நிகழும்..
மௌனத்தில் உருகும் என் இதயத்தை..
உணரமுடிந்ததா.?
★எனது கிளையில் நீ பூவாது
இருந்திருந்தால்..
இலைகளோடே நான் இருந்திருப்பேன்.!
என்னில் பூத்து..
மண்ணில் உதிர்வது முறையா.?
★ உன் அழைப்பு வராத தொலைபேசியை..
நான் ஏசுதல் முறையா.? அல்லது ..
வீசுதல் முறையா.?
★ உன்னால் ..
இரண்டு நாட்களாக என் வானுக்கு..
நிலா வரவில்லை.!
★ உன் பிரிவு..என் நினைவாற்றலின் சரிவு ..!
★ உன்னை அடியோடு இழக்க..
அடியேனின் மனம்..தாங்காத..
கனமாகிப்போகும்..!
★ ஆதலால் இந்த மோதலால்..
இருவர் இதயமும் வேதனை நிரப்பும்..
குப்பைதொட்டி ஆகலாமோ.?
★ என் பிரியமான தோழியே..
எனக்கு உன் பிரியாத நட்பு வேண்டும்..
அதை பிரியங்களுடன் தருவாயா.?
★ இரண்டு நாட்களாய் பேனா..
நீ தந்த இதயக்காயங்களே எழுதுகிறது.!
★ உன் அழைப்பை எதிர்பார்த்து..
இதயத்தை போலவே..
துடித்துக் கொண்டிருக்கும்..
இந்த கைத்தொலைபேசியும்..