வில்வா தமிழ் பதித்த T ஷர்ட்வாசகம் போட்டி

நெஞ்சம் நிமிர்
தஞ்சம் தவிர்

மெய்யின் வழியது
தெய்வம் தொழுவது

உள்ளம் திறந்தவள்
கள்ளம் துறந்தவள்.

வாராது அமைவாளோ
பாராது அமைவாளோ

வல்லாரை வழிபடல்
நல்லாரின் அடக்கம்

காதலில் பிரிந்தார் உண்டோ
தூதொடு மறைந்தார் உண்டோ


அஞ்சுவது அஞ்சா மறவன்
நெஞ்சம், பிணி கொண்டவன்

கனவினால் அழகு கூடும்
நனவினால் நலம் வாடும்

தேரான் தெளிவு
தீரா இடும்பை

அறனும் திறனும்
வேறுவேறு அல்லம்.

அணிமுகம் மதி ஏய்க்கும்
மணிமுகம் மதி ஏய்க்கும்

இளமையும் வருமோ
இறந்ததன் பின்னே

பண்டும் இவ்வுலகத்து இயற்கை
கொண்டது கொடுக்கும் கால்

இளமையும் காமமும் எங்கே
வளமையும் வனப்பும் அங்கே

அடர்பொன் அவிர் ஏய்க்கும்,
சுடர் காய் சுரம் போக்கும்

விழுந்தால் எழு
எழுந்தால் பழு

அறிவு வளர்த்திடு
ஆணவம் முறித்திடு

சாதி ஒழி! மதம் அழி! சாதி!.
ஏதி எடு! எதிரி அடி! சபதி!
சேதி இது! சகதி அது! வாதி!.

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் . (22-Jul-15, 4:20 pm)
பார்வை : 77

மேலே