கசங்கிய கவிதை

கசக்கி எறிந்த காகிதத்திலும்
சிந்தனைச் சிதறலைக் காண்பவன்
நான் காதலில் எழுதிய
கவிதைக் காகிதத்தை
கசக்கி எறிந்து விட்டாய் !
கலைந்து போய்விடவில்லை
அதனால் காதலின் அழகு
ஆனால்
கசங்கிப் போனது இந்த இதயம் !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (22-Jul-15, 3:52 pm)
சேர்த்தது : கல்பனா பாரதி
Tanglish : kasangiya kavithai
பார்வை : 385

மேலே