தூறலின் பயணம்
ஓர் அந்திமாலையின்
தூறல் பொழுதில்
அழைத்திருந்தத் தோழி...
குற்றச்சாரல்களை
வீசினாள் சரமாரியாய்
என் மேல்…
கனா வந்தழைக்கும்
துயில் கொள்ள
விருப்பில்லை...
பசி வந்தழைத்தும்
உணவின் மேல்
நாட்டமில்லை....
என அடுக்கியவள்.....
உள்ளூர ஏதோ
மின்சாரப் பாய்ச்சல்
உணர்வுகளின்
சரிவிகித மாற்றத்தில்…
உன்னால்தான்
அனைத்தும் என்றாள்....
நேற்றுப் பெய்த
திடீர்மழையில்
கவித்துவமென எண்ணி
காவிக்கண்டை பனிக்கூழ்
சேர்ந்து சுவைத்தது
தவறுதான்....
மன்னித்துவிடு
மருத்துவரைப்
பார்க்கலாம் என்றேன்
அப்பாவியாக.....
“இன்னுமா உனக்குப்
புரியல....
உன்னைக் கல்யாணம் பண்ணி
எப்படி சமாளிக்கப் போறேனோ”
என்றவள்..... .
அச்சச்சோ....
என நாக்கைக் கடித்துவிட்டு
துண்டித்துவிட்டாள்
அழைப்பை....
என் மத்தியப்பிரதேசத்தின்
ஆயிரம் பட்டாம்பூச்சிகளை
அமைதியாக்கிவிட்டு
பதறியடித்து அழைத்த
எனக்கு....
அலைகளாய்
வந்து சேர்ந்தது....
அவளின்
நீண்ட மௌனமும்
வெட்கப்புன்னகையும்....
வெளியில்....
தூறல்.....
பெருமழையாகியிருந்தது.....
எனக்குள்ளும்தான்..........!!!!!