இதயம் எங்கே

கடலே உனைத்தேடுகிறேன்
வற்றிப்போவதற்குள் நதியாக..
நிலவே உனைத்தேடுகிறேன்
தேய்ந்துபோவதற்குள் பிறையாக..
பூமியே உனைத்தேடுகிறேன்
உன்மேல் விழுவதற்கு மழையாக..
தென்றலே உனைத்தேடுகிறேன்
உனைவருடுவதற்கு பூவாக..
உயிரே உனைத்தேடுகிறேன்
உயிரே இல்லா சிலையாக..
கள்வனே உனைத்தேடுகிறேன்
மீண்டும் என் இதயத்தை திருப்பிக்கேட்கும் பெண்ணாக..