ஐயோ, பிறகு

"பரிமளம்! கத்திரிக்காய் வாங்கப் போன என் கணவர், லாரி மோதி இறந்துவிட்டார்..."

"ஐயோ, பிறகு..?"

"பிறகு என்ன? கையிலிருந்த முருங்கைக்காயை வைத்து சாம்பார் வைச்சேன்.."

----------------------

காதலன் : நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்.

காதலி : அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?

காதலன் : மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை...

காதலி : !!!!


-------------------------

நோயாளி : டாக்டர், வயித்து வலி என்னால பொறுக்க முடியல...

டாக்டர் : வயிறு வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க?


---------------------

ஆசிரியர் : உன் பக்கத்தில தூங்கறவனை எழுப்பு

ந‌ண்ப‌ன் : நீங்க தானே தூங்க வெச்சிங்க. நீங்களே எழுப்புங்க.

---------------------



முகநூல்

எழுதியவர் : முகநூல் (22-Jul-15, 7:38 pm)
பார்வை : 137

மேலே