எத்தனைநாளோ
எத்தனைநாளோ? இன்னும் எத்தனைநாளோ? - நாங்கள்
ஏங்கிக்காலம் கடத்துவது எத்தனைநாளோ?
காலம்மாறுமா? எங்கள் கோலம்மாறுமா? - கொழுத்துக்
கொண்டாட்டம் போடும்கூட்டம் காலமாகுமா?
வெயிலில்காலம் கடததுவது எத்தனைநாளோ? - உடல்
வெந்துவெந்து தணிவதின்னும் எத்தனைநாளோ?
வியர்வைவற்ற உழைப்பதின்னும் எத்தனைநாளோ? - நாங்கள்
வேதனையை சுமப்பதின்னும் எத்தனைநாளோ?
போலியாட்சி நடப்பதின்னும் எத்தனைநாளோ? - அவரின்
புன்னகையின் வேஷமின்னும் எத்தனைநாளோ?
பொன்மனது கொண்டதலைவர் ஆட்சியிலமரும் - அந்த
பொற்காலம் வருவதின்னும் எத்தனைநாளோ?
நாய்க்கூட்டம் நரிபோல போர்வைபோர்த்தியே - நாட்டில்
நயவஞ்சகம் செய்வதின்னும் எத்தனைநாளோ?
அரசியலார் பேசுகின்ற அழகுபேச்சிலே - நாம்
அடிமையாகி அழிவதின்னும் எத்தனைநாளோ?
சீர்வரிசை அதிகமில்லை என்றுஎண்ணியே - பெண்ணை
சீர்கெடுத்து அழிப்பதின்னும் எத்தனைநாளோ?
ஆணும்பெண்ணும் அரைகுறையாய் ஆடைஉடுத்தியே - எங்கும்
அலைந்துஆட்டம் பொடுவது எத்தனைநாளோ?
தாய்மொழியை தள்ளிவைத்து அன்னியமொழியை - தன்
தலையில்வைத்து துதிப்பதின்னும் எத்தனைநாளோ?
காவியோடு உத்திராட்சை உடலிலணிந்து - நாட்டில்
காமலீலை நடத்துவது எத்தனைநாளோ?
திரைப்படத்து நடிகரையே தெய்வமாய்எண்ணி - நாளும்
கரம்குவித்து வணங்குவது எத்தனைநாளோ?
தேகம்காட்டும் நடிகைகளை தேவதையென்றே - மனதில்
துதித்துதேடி ஓடுவது எததனைநாளோ?
தன்னைபோல பிறரைஎண்ணும் நல்லதலைவர்கள் - நாட்டில்
தலைமையேற்று ஆளும்காலம் எத்தனைநாளோ?
நாளைவாய்க்கும் நல்லகாலம் என்றுஎணிணியே - நாங்கள்
நம்பிகாலம் காலம்கடத்துவது எத்தனைநாளோ?
எழுதியவர்
சொ. பாஸ்கரன்