அன்பே அறிவின் அடையாளம்

அன்பே அறிவின் அடையாளம் அதை
அடைவதே வாழ்வில் சுவையாகும்
அனைவரும் விரும்பும் அமுதாகும்  அது
அனைத்தையும் மாற்றும் மருந்தாகும்
கண்ணீரே அன்பை காட்டிவிடும் அதை
கரம்கொண்ட விரல்கள் துடைத்துவிடும்
கல்லான மனமும் கனிந்துவிடும் அந்த
கடவுளை நேரில் காட்டிவிடும்
எங்கோ பிறந்த மனிதர்களை  நம்
சங்கமம் ஆகவும் செய்துவிடும்
பிரிந்திடும் நேரம் வந்தாலும் அது
பிரியாவி டையைதந்து செல்லும்
அன்பொரு நாளும் அழியாது அது
அழிந்தால் உலகம் நிலைக்காது.

எழுதியவர்
சொ.பாஸ்கரன்

எழுதியவர் : (22-Jul-15, 8:15 pm)
சேர்த்தது : சொ பாஸ்கரன்
பார்வை : 64

சிறந்த கவிதைகள்

மேலே