அறிவே வாழ்வில் ஆக்கம் தரும்
அறிவே வாழ்வில் ஆக்கம் தரும்
ஆசைகள் வாழ்வில் துயரம் தரும்
இளமை என்றும் இனிமை தரும்
ஈன எண்ணம் மனபாரம் தரும்
உறவுகள் ஒருநாள் பிரிவை தரும்
ஊக்கமே உனக்கு உயர்வை தரும்
எளிமையே உனக்கு அமைதி தரும்
ஏற்றம் அடைவது பெருமை தரும்
ஐம்பெரும் காப்பியம் நெறியை தரும்
ஒன்றாய் வாழ்வது நன்மை தரும்
ஓதாது இருப்பது தீமை தரும்
ஒளவியம் பேசுதல் இழிவை தரும்.