தித்திக்கும் சொந்தம்

கல்யாணம் செய்து வைக்க பெற்றவர்கள்
வரன் தேடிக் களைத்துப் போய்
பொறுப்பைத் தரகர் கையில் ஒப்படைத்தால்
தரகர் உண்மைகள் பல மறைத்து
கல்யாணம் ஒப்பேற்ற படாத பாடு படுவார்கள்
கல்யாணம் சரி வந்து விட்டால் சந்தோசம் தான்
இல்லையென்றால் தேடுதல் வேட்டைதான்
இன்று பேசி செய்யும் சம்பந்தங்கள் கைகூடி வருவது மிகக் குறைவு
ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம்
நிறைவேறுவது சிரமம் தான்
தரகர் தேடித் தரும் சம்பந்தம் சில வேளைகளில்
ஏமாற்றமும் தில்லு முல்லும் வந்து விடும்
அதற்காக தரகர்களை குறை சொல்லுவதும் இயல்பே
தரகர்களும் வாங்கும் பணத்திற்கு வேண்டிக் கட்ட வேண்டியதே
கல்யாணம் என்பது கடவுளால் நியமிக்கப் படும் மிகப் புனிதமான உறவு
யார்க்கு யார் என்று எழுதி வைத்தான் தேவன் அன்று
அது அமைய வேண்டிய வேளையில் கை சேர்ந்து வரும்
நடக்க வேண்டிய நேரத்தில் நடந்தேறும்
இது அவரவர் தலைஎழுத்து
இதை விட்டு விட்டு அவசரபட்டால் நடந்து விடாது திருமணம்
அது நம் கணக்கல்ல நாம் கூட்டி சேர்க்க
உன்னைச் சொல்லி குற்றமில்லை என்னைச் சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி
திருமணம் எனும் பந்தம் தித்திக்கும் சொந்தம்
மன நிறைவாய் ஏற்றுக் கொண்டால்
உலகிலே மனிதன் காணும் சொர்க்கம் திருமணமே

எழுதியவர் : பாத்திமா மலர் (22-Jul-15, 11:38 pm)
பார்வை : 425

மேலே