கைப்பேசி காதல்

செல்போன் காதல் நேரில்
செல்லாமல் போன காதல்
நில்லாமல் பேசும் காதல் - அது
சொல்லாமல் போகும் காதல்!

மிஸ் கால் கொடுத்து
மிஸ்ஸஸ் ஆக்கும் காதல்!
மிஸ்டர் அன் மிஸ்ஸஸ் ஆன பின்னே
மிஸ் ! ஆகும் காதல் !

சில நாழிகையிலே அனுப்பும்
காதல் குறுந்தகவலுக்கு
பலமணி நேரமும் நாட்களும்
மாதமும் கூட நேர்த்தியாய்
வீணடிக்கும் விந்தையான காதல்!

பார்க்காமல் பேசியே
பரவசம் தரும் காதல்
கைப்பேசி காதல் இது
பொய்பேசும் காதல் !

புதிர் போல பேசியே
எதிர் காலத்தையே
யோசிக்காத காதல்!

உழைப்பையும் நேரத்தையும்
உருக்கி உருவாக்கிய பணத்தில்
செல்போன் முதலாளிகளை
செல்வந்தனாக்கும் காதல்!

செல்போன் காதலும்
ஆன்லைன் வர்த்தகம்தான் !
அது தொலைக்காட்சி
இது தொலைபேசி !

ஆடம்பர பேச்சி
ஆளை மயக்கும் காட்சி
ஆன்லைனில் பார்த்தும் பேசியும்
ஆர்டரும் செய்கிறோம்!

பொருள் கைக்கு வந்தபிறகோ
பார்த்து அதிர்ச்சியும் அதிருப்தியும்
அடைகிறோம் ! அதுபோல
கைப்பேசி காதலும்!

பார்த்தும் பேசியும்
பரவசப் பட்ட காதல்!
வெட்டியாய் பேசிய காதல் பேச்சு!
எதார்த்த வாழ்க்கையில்
எட்டியாய் மனம் கசந்து போச்சு !

குறுஞ்செய்தியால் கட்டை விரல்
குறுகி குட்டை விரலாச்சி!

கண்ணா என்றும் கண்ணே என்றும்
பொன்னான நேரங்களை கைப்பேசியில்
காற்றில் செலவிடும் காதலர்களே !
காதலுக்கு கண்ணில்லை என்பதால்
யானையை தடவி பார்த்த குருடராகிவிடாதீர்கள்!

கைப்பேசிக் காதலில் கண் சேரும்
மெய்பேசும் வாழ்கையில் உடல் சேரும்
கண்ணும் மெய்யும் சேர்ந்தாலும்
மனம் சேர்ந்தால் வாழ்க்கையில்
கனமில்லை!

காதல் கனவான்களே !
கட்டை விரலால்
குருஞ்சேதி அல்ல
பெருஞ்சேதி எழுது!
கதை எழுது கவிதை எழுது !
காவியம் எழுது ஓவியம் எழுது!
விரயமாக்கும் நேரத்திலே
விண்ணை எழுது!
மண்ணை உழுது
உன்னை எழுது !

காதலி! உன்னைக் காதலி!
உன்னை ஈன்ற பெண்ணைக் காதலி!
அவள் தந்த மொழியை காதலி!
கிடைத்த வாழ்கையை காதலி
சத்தியத்தைக் காதலி
தர்மத்தைக் காதலி
தேசத்தைக் காதலி !

கைப்பேசியும் குருஞ்சேதியும்
எதார்த்த வாழ்க்கை ஆகாது
என்பதுதான் பெருஞ்சேதி!

எழுதியவர் : கவிஞர் சமூக ஆர்வலர் அலெக் (24-Jul-15, 3:44 pm)
Tanglish : kaippesi kaadhal
பார்வை : 570

மேலே