அப்பளக் குழவி

தனது இரண்டு முரட்டுகரங்களால்..
அழுத்திப் பிடித்து..
நடுவில்..
ஒரு பெரிய அழுத்தம் கொடுத்து..
இப்படியும் ..
அப்படியுமாய்..
உருட்டி உருட்டி..
அலைக்கழித்து..
நம்மை ..
அப்பளக் குழவியாக்கி
சலிப்புற வைக்கிறதா..
இந்த வாழ்க்கை..?
..
அப்பளமோ..
சப்பாத்தியோ..
பூரியோ..
எதுவோ ஒன்றை
பிசகில்லா வடிவத்துடன்..
சீராக..
வட்ட வடிவமாய்..
நேர்த்தியாய்..
வடிவமைத்து விட்டுத்தான்
போகிறது அப்பளக் குழவி..
..
யாரேனும் ஒருவராகிலும்
நம்மால்
வாழ்வு பெற..
சீர் பட..
இந்த வாழ்க்கை அளித்துள்ள
வரமன்றோ..
இந்த அழுத்தங்களும்..
உருட்டல்களும்..
அலைக்கழிப்புகளும்..
..
இதில் சலிப்பதற்க்கு
ஏதும் இல்லை..!
எவரது வாழ்விலும்
அர்த்தம் இல்லாமலில்லை !