அவனுக்காகவோ

சாலைகளெல்லாம்
நிரம்பி வழிகின்றன..
மக்கள் தொகையின் ஒரு பங்கு..
ஊர்வலமாய்..
..
தன கோணிப் பையின்
உள்ளே
நிறைந்து விட்ட
நெகிழிக் குப்பைகளை
மாலைக்குள்
கொண்டு சேர்க்க ..
..
கவலையோடு ..
நின்ற சிறுவன்
முகத்தில் ..
இரண்டு மழைத்துளிகள்..
கொஞ்சம் சிரிப்பு ..
..
மேலே..
கருமேகங்கள்..
..கொஞ்ச நேரத்தில்
அடை மழை!
..

எழுதியவர் : கருணா (24-Jul-15, 5:26 pm)
பார்வை : 111

மேலே