யார் கேட்டார்கள்
இருபது வருஷமா..
சார் ..
முடி வெட்டிக் கொள்ள..
என்னை விட்டு
வேறெங்கும் போனதில்லை..
..
பக்கத்து நாற்காலியில்
சாய்ந்து..
சவரம் செய்து கொள்பவரிடம்
சொல்லிக்கொண்டே..
என்னை ..
சாய்த்தவர்..
அதோடு விட்டிருக்கலாம்..
..
அனாவசிய தகவலாய்..
இன்னொன்றும் சொல்லி முடித்தார்..
"கத்தை கத்தையாய்..
கையில் அடங்காமல்
எவ்வளவு முடி ..
அப்போதெல்லாம்..
ஹூம்ம்..
..
இந்த வழுக்கை
எப்படித்தான்
வந்ததோ.."
..
யார் கேட்டார்கள்..
இவரை?
(பி.கு: பல ஆண்டுகளுக்கு பின் பார்த்த கேர்ல் ப்ரெண்ட் புன்னகைத்து போனதன்
அர்த்தம்..இதுதானா..?)