இரக்கம் இல்லையோடி

தன் ஆற்றலை ஒருபடி கூட்டி
மின்னலாய் சுழலும் மின்விசிறி.!

தன் ஒளியை ஒளித்து இரவின்
அடர்த்தியை அதிகமாக்கும்
என் அறைவிளக்கு.!

என்னை கடிக்க மனமின்றி
காதில் தாலாட்டு பாடும்
கொசுக்கள்.!

தாய்மடியாய் தலைகோதி
சுகம் தரும் தலையணைகள்.!

சொர்க்கம் அழைத்துச்செல்ல
காத்திருக்கும் கனவு வாகனங்கள்.!

விட்டு விட்டு கொடுத்த
முத்தங்கள் போதாதென விடாத
ஒரு முத்தத்திற்கு துடிக்கும்
இமை காதலர்கள்.!

இத்தனையும் நான் தூங்க
இரக்கம் கொள்கையிலே.!!

உன் நினைவுகளுக்கு மட்டும்
இரக்கம் இல்லையோடி
என் மீது..??

எழுதியவர் : பார்த்திப மணி (24-Jul-15, 9:02 pm)
பார்வை : 756

மேலே