கைகுட்டையை வாடகைக்கு விடுபவள்

என்னை பார்த்தும்
வாடைக்கு விட்ட
கைகுட்டையை
மெல்ல கைக்குள்
அனைத்துகொண்டு
நான் பார்க்காத போது
மட்டும் ஒற்றை பார்வை பார்க்கும்
அந்த வெள்ளை காகிதத்தில்
மை வைத்த கண்களும்
என்னை ரசிக்க
காற்றின் ரகசிய
சீண்டலுக்கு வழிவகுக்கும்
துப்பட்டாவை
நேற்தியாக நான் பார்க்காத
போது சரிசெய்யும்
செய்வபவளே

டிக்கெட் எடுக்க
கண்டக்டரை தேடுவது
போல் நொடிக்கு ஒரு முறை
என்னையே தேடுகிறாய்..

எடுத்த டிக்கெட்டை
உன் கைப்பட்ட பொக்கிசமாக
வைத்துகொள்ளும்
அந்த குட்டி பர்சில்
மெல்ல சினிங்குதுதடி
உன் கைப்பட்ட டிக்கெட்

நீ இறங்கும் இடம் வந்தவுடன்
பள்ளிக்கு போக அடம்பிடிக்கும்
குழந்தையை போல்
பார்வையால்
விடை பெறுகிறாய்..

ஆற்றில் இறங்கும் சிலையை போல
மெல்ல மெல்ல கீழ்யிரங்கி
அந்த குழந்தைகளின்
போட்டியாக அன்னனடை போட்டு செல்லும் உன்னை
வாகனம் முன் நோக்கி சென்றாலும்
நாளை நீ வரும்
வரை என் இதயதம்
மட்டும் பின் நோக்கியே
...-சத்தியதாஸ்

எழுதியவர் : சத்தியதாஸ் (24-Jul-15, 9:48 pm)
சேர்த்தது : சத்தியதாஸ்
பார்வை : 83

மேலே