வினோதம்
நேற்று மாலை..
சரியான மழை..
மழைக்கு நான் ஒதுங்கிய இடமோ..
ஓவியக்கண்காட்சி நடந்து..
கொண்டிருந்த இடம்.!
சரி மழை நிற்க்கும் வரை..
வேடிக்கை பார்க்கலாம்..
என
உள்ளே நுழைந்தேன்.!!
எல்லோரும் ஒரு ஓவியத்தை..
பிரமித்து புகழ்ந்து கொண்டிருந்தார்கள்.!
நானும் ஆர்வத்தோடு..
அந்த ஓவியத்தை வாங்கிப்பார்த்தேன்.!
தலை எது , வால் எது..?
எனப்புரியாமல்..
எந்தப்பக்கத்தில் இருந்து..
பார்ப்பதெனத் தெரியாமல்..
மாற்றி மாற்றி..
பிடித்துப்பார்த்தேன்..!!
என் செயலைப்பார்த்த கூட்டம்..
தனக்குள் பேசிக்கொண்டது....
இவ்வாறு,,,,,,,,,,,
"இவன் தலைசிறந்த ஓவியன்..
ஓவியத்தை வித்யாசமான..
கோணத்தில் பார்க்கிறான்.." என்று...
அதில் ஒருவர் கைதட்ட..
இருவர் கைதட்ட..
அரங்கமே தட்ட ஆரம்பித்தது..!!!!!!
நானோ..
மழை நின்று விட்டதா...
என பார்க்கத்துவங்கி இருந்தேன்.!