உனக்கான இந்த நாள் -ரகு

எந்தக் கனவுகளும்
எனக்காக வடிவமைக்கப் பட்டதல்ல
எந்தக் கதவுகளும் நான்திறக்கச்
செதுக்கப்பட்டதும் அல்ல
இருந்தும் தேடலெனும்
செதில் கல் வீசப்படுகிறது என்னுள்
அதன் இயக்கங்கள் நிஜம்
உனக்கானதாக மாற்றிக்கொள்
என்கிறது முயற்சி
எனக்குமுன் சென்றக் கால்தடங்களின்
மௌன பாசையை நம்பிக்கையிடம்
மொழி பெயர்க்கச் சொன்னேன்
அது உரக்கச் சொல்கிறது
இந்த நாள் உனக்காக விடிந்ததென்று !!

எழுதியவர் : சுஜய் ரகு (25-Jul-15, 11:40 am)
பார்வை : 107

மேலே