காதல் சாரல்கள்

இல்லை என்றாலும் பரவாயில்லை,
இல்லை என்று சொல்லிவிடாதே.
இல்லாமல் போய்விடுவேன் நான்.
----------------------------------------------------
பொய்யாவது நீ சொல்,
காதல் உண்டென.
பாவம் நான்..,
இருந்துவிட்டு போகிறேன்,
அடுத்த இருநூறு ஆண்டுகள்.
----------------------------------------------------
ஓரப் பார்வை பார்த்ததற்கே,
பற்றி எரிந்தது உயிர்.
முழுதாய் நீயும் பார்த்தால்,
உடனடி மோட்சம்தான்.
-------------------------------------------------------
கடைசியாய் பேசிக்கொண்டிருக்கையில்,
அரைநொடியில் சரிசெய்தாய் ஆடையை.
மூச்சின்றி உலவினேன் மூன்றுநாள்.
---------------------------------------------------------------------
உன்னை பற்றிய கவிதைகள் முடிவுறாவரையில்,
என்னை பற்றி நானும் - கவிஞன்
என்று சொல்வதாயில்லை எங்கும்.
--------------------------------------------------------------------
பலநூறு வார்த்தைகள் கொண்டு,
எழுதுகிறேன் உனக்கான கவிதை.
சிறு கண்சிமிட்டலில் தந்துவிட்டு
போய்விடுகிறாய் பதில்கவிதையை.
============================================

எழுதியவர் : செந்ஜென் (26-Jul-15, 2:08 am)
Tanglish : kaadhal saralkal
பார்வை : 101

மேலே