கடவுள் கற்பனையோ
கடவுள் இருக்கின்றதும்
இல்லையென்பதும் இருவேறு கருத்துக்கள்
பேச்சுரிமை காலத்தில்
சுதந்திரமான விவாத பொருளாய் ..............
ஊடகங்களின் சூடான விவாத பொருள்
உணர்ந்தவர்களும் உணராதவர்களுமாய்
இருவேறு கருத்து மோதல்கள்
காண்பவர்கள் குழப்பத்தில் ................
கரு முதல் கடைசிவரை
கால போராட்டத்தில் மனிதனின்
மாறுபட்ட வளர்ச்சியில்
அறிவியல்தான் ஆட்சி செய்கிறதாம் ...............
விசித்திர பதில் சொல்லும்
அறிவியல் கூட
விழி பிதுக்கி நிற்கிறது
சில விந்தையான கேள்விகளுக்கு .............
கடவுள் இல்லையென்று காலமாய்
உரைத்த விஞ்ஞானம் இன்று
கடவுள் துகளை தேடிக்கொண்டு இருக்கிறது
அணுவை உடைத்து ........
மனிதனின் படைப்பில்
அறிந்திட முடியாத ஆச்சரிய முடிச்சுகளை
ஆண்டவன் பதித்திருக்கிறான் என்பதனை
உணர்ந்த மருத்துவம் கடைசியில் மனித உயிரை
கடவுளிடம் ஒப்படைத்து காத்திருக்கிறது பல சமயங்களில் ............
மனிதனின் இயக்கத்தினை
முழுவதும் ஆராய்ந்த அறிவியலும்
அணுக்களின் உருவாக்கத்தில்
அன்றிலிருந்து தோல்விதான் .............
எவ்வளவுதான் வளர்ச்சியின் உச்சத்தை
அறிவியல் அடைந்த பொழுதும்
மரபணுக்கள் இல்லாமல்
மாற்று உயிரை உருவாக்கவில்லை என்பதே நிச்சயம் ..............
அண்டங்களின் அளவை கூட
அளவிட முடியாத தினமும் அலைகிறது
அதிநவீன அறிவியல்
ஆச்சரிய கூட்டல்களில் அன்றாடம் ஒரு கண்டுபிடிப்பு ......
ஆண்டவன் படைப்பை அறிவியல்
ஆராய்ந்து கொண்டுதான் இருக்கிறதே தவிர
மாற்று படைப்பை உருவாக்க முடியாது என்பதில்
மாற்றுக்கருத்து இல்லை ..........
மண்ணில் விண்ணில் என்று
எல்லா இடங்களிலும் தன்னுடைய
படைப்புகளில் நுணுக்கங்களை பதித்திருக்கும்
கடவுளின் கணக்குகளை மனிதன் அறிந்திடல் சாத்தியமில்லை ...........
ஆகவே கடவுள் இருக்கிறார் ,
உணர்ந்தவர்களுக்கு புரியும்
உணராதவர்களுக்கு ?
குறைகுடம் ததும்பும் நிறைகுடம் ததும்பாது
என்னும் இலக்கண வார்த்தைக்கு ஏற்ப
கடவுளின் கணிப்பில் காலத்திற்கும் கேள்விக்குறியோடு வாழும்
பகுத்தறிவாளர்களுக்கு காலம் பாடம் புகட்டும் ................
கவிஞர் சுந்தர வினாயகமுருகன்