அறிவினை உணர் - இல்லை அழிவினை நுகர்
சாலப்பொருந்தும் சாபம்
மனித இனத்திற்கே பொருத்தம்
ஒற்றுமை இல்லா ஒரே இனம்
உயிர்களில் மனித இனம் மட்டும் ..........
சாதியென்றும் மதமென்றும்
மததிர்க்குள்ளே பிரிவென்றும்
பிரிந்து சிதைந்து பித்தர்களாய்
அலையும் இனம் ...........
மனிதர்களே உருவாக்கிய
மாறுபட்ட தெய்வங்கள் வழிபாடுகள்
மாறுபட்ட மனித நெறிகள்
மறுக்கப்பட்ட மனித நேயங்கள் ...........
மனித தர்மத்தை விட்டுவிட்டு
மத தர்மத்தை போற்றும் போராளிகள்
பொல்லாப்பு மனிதர்கள்
பொய்யான புனிதர்கள் ..........
சுற்றத்தை நாசமாக்கும் சுதந்திர வாதிகள்
சூழ்சிக்கார சுயநலவாதிகள்
தன்னினத்தை காக்க பிற இனத்தை
சூறையாடும் பிரிவினை வாதிகள் ............
அமைதி பூமியை
அகோர பூமியாக்கும் அரக்கர்கள்
மனிதர்களை மரணக்குழியில் தள்ளும்
மனித (மத) விரோதிகள் ........
சவ சங்கமத்தை நிகழ்த்தும்
சாமர்த்திய சாலிகள்
சமத்துவத்தை புதைத்த
சாப பேய்கள் .........
இறப்புகள் பல இயற்கையாய் இல்லை
செயற்கையாய் கொலைகள் சிதையும் உடல்கள்
இது ,
ஒற்றுமை இல்லா மனிதனை ஒரே சாதனை .........
சிந்திக்க தெரிந்தும்
சிந்திக்க முயாததுதான் மனிதனின் சிறப்பு
இப்படியே காலம் நீளுமானால்
மனிதனை அழிவுக்கு மனிதனே காரணமாவான் ,
மாற்று இனங்கள் வாழும்
மனித இனம் மட்டுமே சாகும் ...........
ஆகவே அறிவினை உணர் அழிவினை தவிர்
கவிஞர் சுந்தர வினாயகமுருகன்