இறந்து போகிறேன்

அவள் பார்க்கும் போதெல்லாம்
சூரிய காந்தியாய்
தலை சாய்கிறேன்.

அவள் சிரிக்கும் போதெல்லாம்
மழை கொண்ட
பூமி போல் குளிர்ந்து போகிறேன்.

அவள் பேசும் போதெல்லாம்
இசை புயல் பாடல்
போல் மயங்கிவிடுகிறேன்.

அவள் நடக்கும் போதெல்லாம்
மழலையாய்
தவழ்ந்து போகிறேன்.

அவள் இன்னொருவனை
பார்க்கும் போதெல்லாம்
நொடியே இறந்து போகிறேன்

எழுதியவர் : கவிசதிஷ் (1-Jul-10, 2:04 pm)
சேர்த்தது : கவி ப்ரியன்
Tanglish : iranthu pokiren
பார்வை : 551

மேலே