சமரச காடு
உலகமென்னும் உல்லாச வாழ்க்கையில்
ஓடி அலையும் சுயநல தேடலில்
ஆடி அடங்கும் அத்தனை மனிதனும்
அமைதியாய் உறங்கும் சமரச காடு ...............
உயர்ந்தவன் தாழ்ந்தவன் எல்லாம்
ஒன்றாய் சங்கமிக்கும் ஆறடி வீடு
அறிவிழந்தவர்களின் அறிவினை மெல்ல
தட்டி எழுப்பும் சிந்தனைக்காடு .............
ஏற்றமும் இரக்கமும் எவ்வித பேதமும்
எதுவுமே இல்லாமால் இணைந்திருக்கும் ஏகாந்தவீடு
எத்தனையோ பேரினை மாற்றியவீடு
ஏழைக்கும் இங்கே நிரந்தர வீடு ..........
காசும் பணமும் காடும் நிலமும்
காட்சியில் தெரியும் அதிகாரமும்
அனைத்தும் கைய்யளவு சாம்பலில்
அனுபவம் காட்டும் சமரச காடு ............
சேர்த்த சொத்தும் சேர்ந்த சொந்தமும்
விடைகொடுக்கும் விசித்திர காடு
விடுதலை காடு
விரைவில் மனிதன் வெறும் கூடு ...........
கவிஞர் சுந்தர வினாயகமுருகன்