சிறகுகள்

பறவைகள் வலைகளில் சிக்கும் போது
அழகிய சிறகுகள் இருந்தும் ஏது பயன்
சிறகிழந்த பறவைகளாகும் நிலையில் அவை

மனிதனும் தன் மானம் இழந்து விட்டால்
சிறகிழந்த பறவையும் மனிதனும் ஒன்றே
தன் மானம் என்பது மனிதனின் சிறகுதான்

மனிதனின் வலைக்குள் அல்லல் படும் பறவைகள்
தன்மானம் என்னும் சிறகுகள் இழந்து தவிக்கும் மனிதன்
இரண்டும் பயன் அற்றவை இருந்தும் இல்லாதது போல்

எழுதியவர் : பாத்திமா மலர் (26-Jul-15, 10:32 pm)
Tanglish : siragukal
பார்வை : 101

மேலே