காதல் தோல்வி
ஒரு கதையை கவிதையாக சொன்னால் எப்டி இருக்கும் ஒரு புது முயற்சி
இச்சமுதாயத்தில் காதல் தோல்விக்கு காரணம் பெண்களே என்று நினைக்கும்
சில ஆண்களுக்கு இக் கதை இல்லை இல்லை கவிதை சமர்ப்ப்ணம்
நிலவு என்றேன்
முன்னே வந்து நின்றாள்
கனவு என்றேன்
கண்களின் இமைக்குள் வந்தாள்
அறிவு என்றேன்
புன்னகை தந்து போனாள்
அழகு என்றேன்
எரிக்கும் பார்வை தந்து போனாள்
ஒரு நாள்
காதல் என்றேன்
செருப்பைத் தேடி நின்றாள்
கவிதை என்றேன்
பொய்களின் கூற்று என்றாள்
கண்ணீர் என்றேன்
கோளையின் ஆயுதம் என்றாள்
காத்திருப்பேன் என்றேன்
பதில் இல்லை என்றாள்
மீண்டும் ஒரு நாள்
காதல் என்றாள்
கண்கள் கலங்கி நின்றேன்
வானம் என்றாள்
ஒன்றாய் பறப்போம் என்றேன்
பூக்கள் என்றாள்
ஒன்றாய் பூப்போம் என்றேன்
நாட்கள் என்றாள்
ஒன்றாய் கடத்துவோம் என்றேன்
ஈருலகம் என்றாள்
ஒன்றாய் மாற்றுவோம் என்றேன்
ஒரு முத்தம் என்றேன்
சொர்க்கம் தந்து போனாள்
மீண்டும் என்றேன்
வெட்கம் பரிசாய் தந்தாள்
மீண்டும் ஒரு நாள்
இன்னல்கள் என்றாள்
இருக்கட்டும் பார்க்கலாம் என்றேன்
பிரச்சனை என்றாள்
பிறகு பேசலாம் என்றேன்
குடும்பம் என்றாள்
நம் காதல் என்றேன்
தந்தை என்றாள்
நம் காதல் என்றேன்
தாய் என்றாள்
நம் காதல் என்றேன்
தங்கைகள் என்றாள்
நம் காதல் என்றேன்
இறுதியில்
காதலா? குடும்பமா?
என்ற ஒற்றை கேள்வியை வீசி எறிந்தேன்
கண்ணீருடன் ஓடி விட்டாள்
அடுத்த சில நாட்கள்
அவள் அழைப்புகள் எல்லாம் தொலைந்தன !
அவள் குறுந்தகவல்க்ள் எல்லாம் மறைந்தன்!
அவளை வசை பாட வார்த்தைகள் பல
தேடி அலைய தொடங்கினேன்!
காதல் தோல்வி பாடல்களில் எல்லாம்
அவள் முகத்தை காணத் தொடங்கினேன்!
பெண் இனத்தின் மீது புதிதாய்
வெறுப்புகள் வளர்க்க தொடங்கினேன்!
ஒரு நாள்
அழைப்பு வந்து விட்டது
அவளிடம் இருந்து வரவில்லை
அவள் தோழியிடம் இருந்து
என்னவள் தற்கொலை செய்து கொண்டாள் என்று..!
பதறி அடித்து ஓடினேன்..!
அவள் வீட்டு படி தாண்டி ஓடினேன்!
என் உயிர் மூச்சற்றுக் கிடப்பதை பார்த்தேன்!
உயிரற்ற உடலாய் என் ஆன்மா கிடப்பதை பார்த்தேன்!
சுற்றி சுற்றம் கதறுவதை பார்த்தேன்!
என் கண்ணில் கண்ணீருடன்
என் மனதும் கரைந்தது!
அப்பொழுது தான் புரிந்தது!
தாமதமாக தாமாகவே புரிந்தது!
பெண்களுக்கு குடும்பம் என்பது வேறு!
ஆண்களுக்கு குடும்பம் என்பது வேறு!
பல ஆண்கள் காதலுக்காக குடும்பத்தைத் துறக்கிறார்கள்!
பல பெண்கள் குடும்பத்துக்காக காதலையே துறக்கிறார்கள்!
காதல் தோல்விக்கு காரணம் பெண் அல்ல
நம் மண்....!
காதல் தோல்விக்கு காரணம் பெண்கள் என்று புலம்பாமல்
பெற்றோர் சம்மதத்துடன் காதலை கல்யாணமாய் மாற்றுவோம்
வாழ்க காதல்!!!!! வளர்க பெண்ணினம்!!!
தமிழன் "பிரபாகரன்"