ஒன்றாகிடு

நானும் நீயும் ஒன்று தான்
எப்படி என்று கேட்கிறாயா!

நம் ஒருவரின் தனிப்பட்ட எண்ணங்களை இணைத்தால் கிடைப்பது இரு வேறு விதமான எண்ணங்கள் (1+1=2)
அந்த இருவிதமான எண்ணங்களை நாம் கலந்தாலோசிக்கும் பொழுது
நாம் இருவரும் ஒற்றை கருத்தில் ஒன்று சேருவோம் ((1)2=1)...


உன்னை என்னில் கரைத்தாலும்
என்னை உன்னில் கரைத்தாலும்
நாம் மீண்டும் ஆதியை
தொட்டுவிடுவோம் (1-1=0)...


என் அன்பு பெருக்கெடுத்தாலும்(1*1=1)
உன் கோபம் வகுத்தெடுத்தாலும்(1/1=1)
நாம் ஒருவர் மேல் ஒருவர்
வைத்திருக்கும் பாசம்
ஒன்று தான்...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~`
1+1=2 ஏனெனில்
எனக்கு எது நன்று என்று நீயும்
உனக்கு எது நன்று என்று நானும்
யோசிக்கையில் மட்டுமே...
இல்லையேல் 1+1=1
நம் வாழ்க்கையில்....



(1)2=1 இருவரின் மூளைக்கு
கீழ் உள்ள இதயத்தில் எண்ணும் பொழுது
இரண்டு ஒன்றாகிறது...

1-1=௦ உனை நான் இழக்கவோ
எனை நீ இழக்கவோ வேண்டாம்
இருவரும் இணைந்தே
இழந்திடுவோம்
இந்த பிரபஞ்சத்தை...

1*1=1எல்லைகள் கடந்து
என் மேல் உன் அன்பும்
உன் மேல் என் அன்பும்
பெருக்கெடுத்து பாயும் பொழுதும்!
அது ஒற்றை ஜீவ நதியாய்
உரு பெறுகிறது...

1/1=1 நீயும் நானும் ஒன்றே(சமம்)...
உன்னில் என்னை வகுக்க முடியும்...
என்னில் உன்னை வகுக்க முடியும்...


இப்பொழுதாவது விளங்குகிறதா!
நீயும் நானும் ஒன்று தான்
வேறு இல்லை என்று....

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (26-Jul-15, 11:23 pm)
பார்வை : 65

மேலே