வலைவீசிப் பிடித்தவள் -1

வலைவீசிப் பிடித்தவள் -1

வலைவீசிப் பிடித்தவள்
மகிழ்ச்சியாய் வாழ்கிறாள்
வலையில் விழுந்தவனோ
காணாமல் போகினான்.

உருவத்தில் குரலில்
மாற்றம் எதுவுமில்லை
உள்ளமும் சிந்தனையும்
உருக்குலையாமல்
அவளுக்கு ஏற்றபடி
உருமாற்றம் கண்டது,

அவளுடன் பிறந்தவர்கள்
ஆறுபேர் மட்டுமே
அக்காமார் ஐவர்
பேர்சொல்லவோர் அண்ணன்.

அண்ணனுக்கு மட்டுமே
முறைப்படி திருமணம்
அக்காமார்கள் ஐவரும்
வலைவீசி வசதியான
மணாளர்களைக் கண்டறிந்து
காதல் மணம் புரிந்தவர்.

விட்டைவிட்டு ஓடிவந்த
”கடைக்குட்டி”த் தங்கையை
அண்ணனும் தேடினான்
ஒப்புக்குச் சப்பாணியாய்;
தேடினான் தேடினான்
ஒன்றும் தெரியாதவன் போல்
கவுரவப் பிரச்சனையைத்
காப்பாற்ற வேண்டுமென்று,

வந்தவளை ஆதரித்தார்
வலையில் விழ்ந்தவனின்
அக்காமார் இருவர்;
பெற்றவரின் எதிர்ப்பும்
மயக்கராஜன் பார்க்கவில்லை.

வலையில் விழுந்தவனும்
அவளண்ணன் கோமாரியும்
அலுவலகம் ஒன்றிலே
பணியாற்றும் ஊழியர்கள்.

வலைவீசிப் பிடித்த வள்ளி
செம்மேனி கொண்டவள்
அழகிலும் அவளை யாரும்
குறை சொல்ல முடியாது.

அவள் பேச்சிலும் தேன்மாரி
கேட்பவர் காதுகளில்
தேனாற்று வெள்ளம்.
சிந்தனையால் செயலால்
பக்கவிளைவு தரும்
கதிர்வீச்சால் ஈர்ப்பவள்.

மணங்கண்ட இருமாதங்களில்
நாத்தனார் இருவரையும்
பகைவஞராய் மாற்றிவிட்டாள்
மூச்சையும் நச்சுக் காற்றாக்கி
பிரேமையால் எவரையும்
பிரித்தாளும் வஞ்சகி
காதல்வலை நாயகி.

இன்னொரு அக்காவுடன்
உறவின்றிக் கிடந்தவன்
மெய்மறந்து உயிர்வாழும்
மன்மதனாம் மயக்கராஜன்.

முறிந்த உறவைப் புதுப்பிக்க
காதல் மனையாட்டியின்
கட்டளைக்கு ஏற்றபடி
நண்பனைத் தூதனுப்பி
வெற்றியும் கண்டுவிட்டான்.

அக்கா அருந்ததிக்கு
ஆண்பிள்ளைகள் மூவர்
முத்தாயிரு பெண்குழந்தைகள்..
அவர்களில் மூத்தவன்
முத்து. என்பவன்
கைநிறையச் சம்பாதிக்கும்
அரசு பதவி வகிப்பவன்..

அவனைத் தன்மகளுக்கு
மணம் செய்து வைக்கவே
கொத்தடிமைக் கணவன் மூலம்
அருந்ததி குடும்பத்தைத்
தன்பக்கம் இழுத்தாள்
காதல்வலை ஞானி
கனிமுத்து வெடிவள்ளி.

எழுதியவர் : மலர் (26-Jul-15, 11:40 pm)
பார்வை : 201

மேலே