நங்கை மலர்
சின்ன சின்ன பூக்களுக்கும்
வண்ண வண்ண எண்ணங்கள்
உண்டோ ...!
எண்ணங்களை வண்ணங்களாய்
மலர்ந்திங்கு சொல்லுகிறதோ ..!
மலரின் மதுவை கொள்ளை
கொள்ள வண்டு கூட்டம்
வட்டமிடுகிறதோ ..!
மலரின் மதுவும்....!
மங்கையின் இதழும்
மனிதனை மயக்கும் இரசமோ ..!
பனித்துளி ஒருதுளி
படிந்திட பவளமாகும்
மலரோ ...!
நங்கையின் நறுமணம்
மலர்களின் மகத்துவம் ..!
மங்கையின் கூந்தல் மோகம்
மலரின் மங்காத வாசம் ...!
மலரினில் இதழ்களே ..
மங்கையின் இதழோ ..!
மலரின் வண்டுகள்...
மங்கையின் கண்களோ ...!
மலர் பேசும் ....
மங்கையின் நேசம் ....
மகரந்த தோகை...
மாதுவின் போதை ...
மலர்களின் இருக்கை மயக்கும் ...
மங்கையின் மனதை .....!
மலரினும் மங்கை ...
நதிக்கொரு நங்கை ..
உலாவிவரும் கங்கை ....!