குழந்தையின் மொழி

ஜன்னலில் வந்தமர்ந்த
குருவியிடம்,
பேசத்துவங்குகிறது
என் குழந்தை....
"அப்பாவுக்கு நேரமில்லை
என்னோடு பேசுவதற்கு...
நீ வந்துவிடு தினமும்..."
தினமும் வந்துவிடுகிறது
என் வீட்டுக்கு....
குழந்தையின் மொழி
புரிகிறது,
குருவிக்கு....

எழுதியவர் : பனவை பாலா (27-Jul-15, 11:59 am)
Tanglish : KULANDHAIYIN mozhi
பார்வை : 67

மேலே