ஈழம் மாற்றமொன்றே மாறாததை உடைக்கும்
விதியென்று
விலகியதில்
இழந்து விட்டோம்
ஈழத்தை
எங்களோடு இல்லை
இன்று ஈழம்
இழந்ததை மீட்க
வாருங்கள்
இன ஒற்றுமை
வேண்டும் நம்மிடத்தில்
எதையும் கடந்துபோவதை எதார்த்தமென
பழகிய மனிதரிடத்தில் எங்கே மனிதாபிமானம்
இறந்த தாயிடம்
பால் தேடும்
குழந்தைகள்
கன்னி இழந்து
சிதைந்த உடலோடு
புதைகுழியில்
பெண்கள்
கிழந்த ஆடையால்
கயிறு வெய்ந்து
கட்டப்பட்டு கொன்றொழிக்கப்பட்ட
ஆண்கள்
கருவில் குழந்தையை கிழித்தெறிந்த
வலியில்
ஈழத்தாய்கள்
இசைப்பிரியாவோடு
இன்னும் எண்ணிக்கை கணக்கிடாத
எத்தனையோ
சகோதரிகள்
சிறகடித்துப் பறக்க
முடியாமல்
வெட்டிய சிறகோடு
ஈழச் சிறுவர்
சிறுமியர்கள்
இத்தனை வலிகளையும் விதியென்று
கருதிய தமிழ்
மக்கள்
எழுந்திருக்கவே
இல்லை இன்றளவும்
தமிழினம்
இடிமுழுக்கச்
சிரிப்பொலிகள்
சிங்களவனிடத்தில்
எமது ஈழம் எங்களுக்கு
வேண்டும்
என்ன தவறு கண்டீர்
இன விடுதலையில்?
மாற்றமொன்றே
மாறாதது
என்றார்கள்
மாற்றத்தை
விரும்பாதவர்கள்
புரிதலில்லை அவர்களிடத்தில் புரிதலுக்காய்
ஈழத்தை ஒப்பிடுங்கள்
மாற்றம் நிகழ்வதாலே மாற்றமும்
மாற்று முகம்தான்
நெகிழும் தன்மை அதற்கிருக்க
மாறாதது மாற்றமென்று எப்படிச் சொல்ல
முடியும்
ஈழத்து மாற்றம் ஏமாற்றமல்ல
அது
இன விடுதலைக்கான
ஏணிப்படி
அடிமை மாற்றத்தை
புரட்சி விடுதலையால்
நிகழ்த்தி
நெகிழும் மாற்றத்தை
பெற்றிடும்
அதுவே ஈழம்
ஏமாற்றாதே
மாற்றத்தை
ஈழத்தில் அடிமை
மாற்றாகி சுதந்திரக் காற்றை சுவாசிக்க
வழிதேடும் வரையில்
தமிழ்த்தாய்
ஈன்றெக்கத் துடிக்கிறாள்
ஈழ விடுதலையை
ஈழத்து விடுதலை நோக்கிய பயணத்தில்
மாற்றம் நிகழும்
அது மாறாததெனும்
பொய்யை
உடைத்து விதியெனும்
விளங்காதவனை
விரட்டும்
விரைவில்,,,