ருசிதேடிய நாக்குகள்

பழுத்த கனிகளின்
ருசிதேடிய
பெருத்த உடலின்
நாக்குகள்,,,

சுவை விரும்பி
சுற்றத்தாரை மிதித்து
வாழ கற்றிருக்க,,,
தன்பெருத்த உடலை தூக்கிக்கொண்டு
திரிகிறது
அச்சுவை விரும்பி,,,

கடற்கரையெங்கும் நடைபயிற்சிப்
பாதச் சுவடுக்குள்
சிக்கித் தவிக்கும்
சேர்ந்த கொழுப்புகள்,,,

திசைகளெங்கும்
காணவில்லை
தேவைக்குதவும்
கரங்கள்,,,

நோக்கும் முகங்களெல்லாம் ஏதோவொரு
ஏக்கங்களோடும், எதிர்பார்ப்புகளோடும்,,,

பெருத்த உடல்களுக்கு மட்டும் அழகாய்த் தெரிகிறது உலகு,,,

பழுத்த கனிகள் பார்த்தவுடன் கிடைப்பதனால்,,,

பணத்தின் மதிப்பு
மனிதாபத்தை
விற்றது
ஏழைக்கு தெரியவாப் போகிறது,,,

காய்ந்த கனிகளைத்
தேடுகிறது
ஏழையின் கண்கள்
வறுமையில்
வாடிய வயிறுக்காக,,,

காய்ந்த கனிகளும்
ஏழையை ஏமாற்ற
விதைகளைத்
தேடுகிறது கண்கள்
அவசர அவசரமாய்,,,

கிடைத்த விதைகளில்
ஏதேனும் ஊட்டச்சத்து ஒளிந்திருக்குமா
அப்போதைய
வயிற்றுப் பசிக்கு,,,

என்றேனும் ஒருநாள்
ஏழைக்கு படையலாகும்
ஆசையோடும் அன்போடும்
அரவணைப்போடும்,,,

மிதித்து வாழும்
பெருத்த உடல்களிடம்
தோற்று தோற்று
மீண்டெழ துடிக்கிறது
பழுத்த கனிகள்,,,

எழுதியவர் : அரும்பிதழ் சே (27-Jul-15, 12:55 pm)
பார்வை : 61

மேலே