பெண்சிசுக் கொலை
அனைத்தும்
அமிர்தமென
படைத்தாய்
அதில்
விஷவாடை
அறியவில்லை
நான்
தாய்ப்பாலெது? கள்ளிப்பாலெது? பிரித்தெடுக்க
முடியா
அறிவெனக்கு
என்ன செய்ய?
அழுகிறேன்
நான்
பெண்ணாக இந்த
பூமியில் நான்தான் பிறந்தது குற்றமா?
வளர்ந்ததும்
நானுமொரு
தாயென
என்தாய்
மறந்தாளோ!
மரணமே
மடியேந்தி
கேட்கிறேன்
எனக்கொரு
வரம் கொடு
சுழலும் பூமிதனில்
சுகமாக கூட
நான் வாழ்ந்திட
வேண்டாம்
பெண்சிசு
கொலை புரியும் சூழ்ச்சிகள் நிறைந்த மனங்களில்
சுயநலமது வெனவும்,
குற்றச்
செயலது வெனவும்,
செய்யாதே
கொலை யெனவும்
புத்தியுரைத்து
விடுவதாக
ஒற்றை
வாக்குறுதியை
வரமாக
கொடு மரணமே
நான் இறந்த
பின்னாலும்
இனியும்
இம்மண்ணில் நிம்மதி பெருமூச்சு விட்டு பெண்சிசு வாழ வேண்டி
இப்போதே வரம்
கேட்கிறேன்
மரணமே எனக்கு
வரம் கொடு
கூடவே அதிலுன் வாக்குறுதியையும் சேர்த்து கொடு,,,
(தமிழகத்தில் தற்போது பெண்சிசு கொலை பரவலாக்கப்படுகிறது. குறிப்பாக
சேலம்,வேலூர்,கிருஷ்ணகிரி,விருதுநகர், போன்ற வறட்சி மாவட்டங்களில்
அதிகளவு பெண்சிசு கொலை நிகழ்த்தப்பட்டு வருகிறது. )