உண்மை
உண்மையாய் நேசிக்கத்
தொடங்கிய
பொழுதுகளில்
ஒருவரும் இல்லை
உலகில்
வெற்றிடம் நிரப்ப
உண்மையை நேசிக்கத் தொடங்கினேன்
விளங்காதவன்
இவனென்று
ஊரார் தூற்ற
தோற்றத்தை நானிழக்கவில்லை
துன்பம் எனை
சூழ்ந்த போதும்
உண்மையது
சுமைதூக்கும்
வாரும் ஐயனே மார்க்ஸிய தந்தையே வாழ்க்கை இதுவென
நல்லுலகம் காண
வழி நடத்துவீர்
எனை நீயே
வந்தேன் சரணடைந்தேன்
உண்மையே
சர்வமும் என
நித்தமும் படித்துணர்ந்தேன்
யாரிடம்
எனக்கென்ன
பகை
இருந்தும் பகையாளி
நானானேன்
அவர்களிடத்தில்
மதில் மீதெழுந்து
தாண்டவமாடும்
அடங்கா
அலைகடலதுவென அறிந்தபின்னாலே
உண்மை மூழ்குமென மூடர்களின்
கூற்றில்
புழுதி பறப்பதை
கண்டேன்
கண் தெளிவுற்று
நானும் எழுந்தேன்
செல்வமும்,செழிப்பும் என்னிடமில்லை உண்மையும்,உழைப்பும் அவர்களிடத்தில்
இல்லை
இதுதான் முறையோ வாழ்க்கைக்கிது
முரணோ
வேண்டி தவமிருக்கும் வேடமிட்ட சுவாமிகளும்
சுகமாய் வாழ்ந்திட
காணிக்கைக்கு கையேந்தும்
சுழலும் காலத்தில்
பணம் மாத்திரம்
இயங்குதல் முறையா
நித்தம் நித்தம் இறந்தாலும்
இன்னமும் வாழ்ந்துவிடுகிறேன் நான்
உண்மைதான்
எனை இயக்குவது
"உண்மை" தான்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
